Title of the document

வாட்ஸாப் செயலியானது தனிநபர்களுக்குள்
தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதனை விளம்பரங்கள், பிரச்சாரங்கள் போன்றவைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் ஒரு மாதத்திற்கு 1.5 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்கள் வாட்ஸாப்பினை பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஒரு மாதத்திற்கு 2 மில்லியன் வாடிக்கையாளர்களின் அக்கவுண்டுகளை வாட்ஸாப் நிறுவனமே ரத்து செய்து வருகிறதாம்.

இந்நிலையில் வாட்ஸ்அப் மூலம் தேவையில்லாத வதந்திகள், பிரச்சாரங்கள், கொலைமிரட்டல்கள், ஆபாச படங்கள் என தனி நபர் ஒருவரை தொல்லை செய்யும் வகையில் அனுப்பப்படும் மெசேஜ்கள் குறித்து புகார் அளிக்கும் வசதியை இந்திய தகவல்தொடர்பு துறையானது ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது பல பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கொடுத்த அழுத்தத்தின் மூலம் தகவல் தொடர்புத் துறையால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய வசதியின் மூலம் யாராவது ஒருவர் உங்களுக்கு தவறான மெசேஜ்களை அனுப்பினால் உடனே அந்த மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, அனுப்பிய நபரின் மொபைல் எண்ணையும் குறிப்பிட்டு ccaddn-dot@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதன் மூலம் உங்களது புகார் பதிவு செய்யப்படும். அதனைத் தொடர்ந்து காவல் துறை உதவியுடன் மெசேஜ் அனுப்பிய அந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post