Title of the document


திருக்குறள் : 137

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

பழமொழி:

Jack of all trade is master of none

பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

பொன்மொழி:

இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.

- பிரேண்டர்ஜான்சன்

இரண்டொழுக்க பண்பாடு :

1) எங்களது பகுதியில் இருக்கும் அரிய வகை உயிரினங்களை என்னால் முடிந்த அளவு பாதுகாப்பேன். அவைகளின் அழிவுக்கு நான் காரணமாக மாட்டேன்.

2) நம் மாநில மரமாகிய பனைமரம் மற்றும் அழிந்து கொண்டு இருக்கும் இலுப்பை மரம் போன்ற மரங்களை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவேன்.

பொது அறிவு :

1) உப்புத் தண்ணீரில் வளரும் மரம் எது ?
 மான்குரோவ்

2) 90 பாடல்கள் இடம் பெற்றிருந்த ஒரே திரைப்படம் ?
இந்திரசபா (இந்தி)

நீதிக்கதை :

தண்ணீரைத் தேடி

நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிண்ற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிண்ற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது.

“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

இன்றைய செய்தி துளிகள் : 
1) வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தேர்தல் வரை நிறுத்த கோரி வழக்கு

2) தமிழக அரசுக்கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில், விரைவில் புதிதாக 500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

3) கல்வி கற்கும் திறன் பாதிப்படைவதாக வேதனை பள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்: நடவடிக்கைக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

4) போட்டித் தேர்வுக்கு வழிகாட்டும்  வகையில்  உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தை   முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி  தொடக்கி வைத்தார்.

5) துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா உலக சாதனை!

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post