Title of the document

தமிழகத்தில் 91 அரசுக் கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகள், 40 பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகள், 3 உடற்கல்வி கல்லூரிகள் உள்ள  இந்த கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகள், 2018-19 கல்வியாண்டு அதிகரித்த மாணவர் சேர்க்கை உள்ளிட்டவற்றால் ஏராளமான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளது.


 இந்நிலையில் உதவி பேராசிரியர் நியமிப்பதற்கு பதிலாக, கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க கல்லூரிக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பணி நிரவல் மூலம் அரசுக்கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட 500 கவுரவ விரிவுரையாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள கல்லூரிக்கல்வி இயக்கம் திட்டமிட்டுள்ளது.


 இதுதொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த அரசுக்கல்லூரி முதல்வர்கள்  கூட்டத்தில் கல்லூரிக்கல்வி இயக்ககம் சார்பில் கல்லூரி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் முடிவுக்கு மாற்றாக துறைத் தலைவர்கள் பரிந்துரைக்கும் நபர்களை கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்க சில கல்லூரி முதல்வர்கள் திட்டமிட்டுள்ளனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post