கட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா? தனியார் நிறுவன ஆய்வுக்கு உத்தரவு

Join Our KalviNews Telegram Group - Click Here

மத்திய அரசின் கட்டாய கல்வி சட்டத்தில், இலவச, எல்.கே.ஜி., சேர்க்கை திட்டம் சரியாக நடந்ததா என, தனியார் நிறுவனம் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., வகுப்புகளில், 25 சதவீத இடங்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்ப மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டன.இவர்களுக்கான, கல்வி கட்டணத்தை, பள்ளிகளுக்கு, தமிழக அரசு வழங்குகிறது. இந்த வகையில், ஆண்டுக்கு, 125 கோடி ரூபாய்க்கு, இலவச மாணவர் சேர்க்கைக்கு அரசு செலவிடுகிறது. இந்நிலையில், இந்த திட்டம் முறையாக நடக்கிறதா; சேர்க்கப்பட்ட மாணவர்கள், பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பத்தினரா என, ஆய்வு நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், தனியார் நிறுவனம், ஆய்வு நடத்த உள்ளது. இந்த ஆய்வில், ஐந்தாண்டுகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்; அதற்கு நிதி பெறப்பட்டதா; மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதா; குறைந்துள்ளதா என, புள்ளி விபரம் எடுக்கப்பட உள்ளது.அதேபோல, இலவச சேர்க்கையில் சேர்ந்து, எட்டாம் வகுப்புக்குள் படிப்பை, இடையில் விட்டவர்களின் எண்ணிக்கை, வேறு பள்ளிகளுக்கு மாறியவர்களின் எண்ணிக்கை போன்ற விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இந்த விபரங்களுக்கு, பள்ளிகளில் உள்ள ஆவணங்களை, தனியார் நிறுவனத்துக்கு தர, தனியார் பள்ளிகளுக்கு, மெட்ரிக் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்