Title of the document

அங்கன்வாடியில் இடைநிலை ஆசிரியர்கள் பணி அமர்த்துவதை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வழக்கு தொடுத்து இடைக்கால தடை பெற்று இருந்தது. இந்நிலையில் இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்றைய விசார ணக்கு பின் ...

அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் எந்த பாதிப்பு இருக்கக்கூடாது என்றும்.

இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எந்த மாற்றம் செய்யக்கூடாது என்றும் அரசுக்கு நீதிபதி  வழிக் காட்டல் நெறிமுறையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இது தீர்ப்பு நமக்கு வெற்றி அல்ல.
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் பணி அமர்த்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பதே
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒருமித்த முடிவு .

ஆகையால் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மேல் முறையீடு செய்து, இறுதி
வெற்றி பெறுவோம்.
வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து மேல் முறையீடு செய்யப்படும்.

ஆசிரியர்கள் எந்த வித கலக்கமும் அடைய வேண்டாம்.

இவண்
க.மீனாட்சி சுந்தரம் Ex.mlc
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன., ,. தகுதி உள்ளவர்களை பணி அமர்த்தினால் வேலைவாய்ப்பு அற்ற நிலையில் மாற்றம் ஏற்படும் think about you please

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post