பின்லாந்து,சுவீடன் நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா சென்று வந்த மாணவர்களுக்கு பாராட்டு

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831


பின்லாந்து,சுவீடன் நாடுகளுக்கு கல்விச்சுற்றுலா சென்று வந்த ஸ்ரீ மீனாட்சி ஆண்கள் பள்ளி மாணவர்களுக்கு  வீறுகவி முடியரசனார் அவைக்களம் சார்பில் பாராட்டு..

தமிழக பள்ளிக்கல்வித்துறையின்  கீழ் பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு கல்வி சுற்றுலா சென்று வந்த ஸ்ரீமீனாட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வீறு கவி முடியரசனார் அவைக்களம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் அறிவியல் மற்றும் கணித   கண்காட்சியினை நடத்தி வருகிறது.அந்த வகையில்  ஸ்ரீமீனாட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கோல்டுஸ்டில்லர்,கார்த்திகேயன் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் வழிகாட்டலில்,அறிவியல் ஆய்வுக்கட்டுரையை வழங்கி பின்லாந்து ,சுவீடன் நாட்டுக்கு சென்று அங்குள்ள கல்விமுறையை நேரில் கண்டு அறிந்துவந்தனர்
மாநில அளவில் ஏழாம் இடம் பெற்றனர்...

அவர்களை வீறுகவி முடியரசனார் அவைக்களம் சார்பில் செயலர்,ஸ்டீபன்மிக்கேல்ராஜ், இணைச்செயலர் வனிதா,ஸ்டெல்லாராணி, பாராட்டினர்

தலைமைஆசிரியர் வள்ளியப்பன் , பயிற்றுவித்த அறிவியல் ஆசிரியர் செந்தில் குமாருக்கும் பொன்னாடை அணிவித்தும், பத்தாம்வகுப்பு மாணவன்,கோல்டுஸ்டில்லர்,கார்த்திகேயன்இருவருக்கும் நூல்களை வழங்கியும், மாணவர்களின் அனுபவத்தை எடுத்துரைக்கச் சொல்லியும் வாழ்த்தினர்.
இதில் தமிழாசிரியர் முத்துக்குமார், பிரகாஷ்மணிமாறன், சத்தியமூர்த்தி ஆசிரியர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்...

Post a comment

0 Comments