அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம்

அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களிடம் ஆங்கில மொழி பேச்சுத் திறனை வளர்க்க, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, ஒப்பந்தம் கையெழுத்தானது.அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களின் மென்திறன் மேம்பாடு, ஆங்கில மொழி பேச்சுத்திறன் வளர்த்தல் போன்றவை தொடர்பாக, தமிழக அரசுக்கும், பிரிட்டிஷ் கவுன்சிலுக்கும் இடையே, நேற்று முன்தினம், ஒப்பந்தம் கையெழுத்தானது.சென்னை, தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர், இ.பி.எஸ்., முன்னிலையில், உயர் கல்வித் துறை முதன்மை செயலர், மங்கத்ராம் சர்மா, பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குனர், ஜனகா புஷ்பநாதன் ஆகியோர், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ராஜு, அன்பழகன், உதயகுமார் பங்கேற்றனர்.