Title of the document
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி, துணை முதல்வரை, ஆசிரியர்கள் இன்று  காலை சந்திக்க உள்ளனர். 

தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்  எனக்கேட்டு, ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தனர். முதல்வர் தனிப்பிரிவிலும்  மனு கொடுத்தனர். 


இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று காலை 11 மணி அளவில் ஜாக்டோ-ஜியோவினர் சந்திக்க உள்ளனர்.  இதையடுத்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படுமா தொடருமா என்று தெரியவரும். 


இதற்கிடையே, சஸ்பெண்டு செய்யப்பட்ட ஆசிரியர்கள், அதனால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள், வேறு பள்ளிகளுக்கு மாறுதல் செய்யப்படும் ஆசிரியர்களின்  பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உள்ள தகவல் பலகைகளில் ஒட்டி வருகின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post