Title of the document
  பள்ளி கல்வித் துறையில், புதிய பாடத்திட்டம் தயாரிப்பது உள்ளிட்ட, 25 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில், ஊழல் நடந்துள்ளதை, லஞ்ச ஒழிப்புத் துறை கண்டுபிடித்துள்ளது.இதில் சம்பந்தப்பட்ட, இரண்டு இயக்குனர்கள் உள்ளிட்ட, ஐந்து பேர் மீது, துறை ரீதியான நடவடிக்கைக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.ரூ.13.98 கோடிபள்ளி கல்வித் துறை சார்பில், தமிழை வளர்க்க, 'உலகெல்லாம் தமிழ்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு, 13.98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.இப்பணி, இடைநிலை ஆசிரியர் அமலன் ஜெரோம், ஆசிரியை சித்ரா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனராக பணியாற்றிய லதா, உதவி பேராசிரியை சங்கீதா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு அரசு, 20 கோடி ரூபாய் ஒதுக்கியது.ஆனால், அரசு ஒதுக்கிய நிதி, முறையாக செலவிடப்படவில்லை. போலி ரசீதுகள், ஆவணங்கள் தயாரித்து, பல கோடி ரூபாய் கையாடல்செய்யப்பட்டுள்ளது.ஆசிரியர் அமலன் ஜெரோம், 'உலகெல்லாம் தமிழ்' திட்டத்தில், எம்.எல்.கே., என்ற, பினாமி நிறுவனத்திற்கு, நிதி வழங்கி உள்ளார்.இயக்குனர் அறிவொளி, பாடத்திட்டம் தயாரிப்பில் ஈடுபட்ட, ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களுக்கு, சரியாக சம்பளம் வழங்கவில்லை. ஆனால், பணம் வழங்கியதாக ரசீது உருவாக்கப்பட்டு, மோசடி நடந்துள்ளது.இதேபோல், 2016 - 2018 வரை, பல்வேறு மோசடிகள் நடந்ததாக, புகார் வந்ததை தொடர்ந்து, ஐந்து பேர் மீதும், குற்றவியல் சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடும் அதிர்ச்சிசென்னையில், இயக்குனர் அறிவொளியின் வீட்டிலும், அவரின் அலுவலகத்திலும், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம், சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.அவரிடம், பல மணி நேரம் விசாரணையும் நடத்தி உள்ளனர்.இச்சம்பவம், கல்வித்துறையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட, ஐந்து பேர் மீதும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படஉள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post