Title of the document

பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வில் முறைகேடுகளை தடுக்க, வினாத்தாள், விடைத்தாளை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காரில் கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1 ம் தேதியும், பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 6ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 அன்றும் துவங்க உள்ளது. இதையொட்டி,  தமிழகம் முழுவதும் எல்லா மையங்களுக்கும் போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு, அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வினாத்தாள் லீக்காவதை தடுக்க  தேர்வு நாளன்று வினாத்தாள் பாதுகாப்பு மையத்திலிருந்து, தேர்வு நடக்கும் மையத்திற்கு, வினாத்தாளை எடுத்து வர, வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், காரில், அன்றைய தேர்விற்கான வினாத்தாளை, தேர்வு மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டும். பள்ளியில் பாதுகாப்பாக வைத்திருந்து, தேர்வு தொடங்கும் நேரத்தில், மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாளை பிரிக்க வேண்டும். பின்னர் தேர்வுக்கு வராத மாணவர்கள் விடைத்தாள் முகப்பு சீட், தேர்வு எழுதிய மாணவர்களின் முகப்பு சீட்டில் உள்ள ‘ஏ’ படிவம் ஆகியவற்றை தனித்தனியாக கவரில் வைத்து, ‘சீல்’ இட வேண்டும். இதை சேகரித்து வழித்தட அலுவலர்கள், மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்வுத்துறை  உத்தரவிட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post