பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் கல்வித்துறையின் பழிவாங்கும் நடவடிக்கை போராட்டத்துக்குத்தான் வழிவகுக்கும்!'- முதல்வருக்குக் கடிதம் எழுதிய கல்வியாளர்கள்

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831
பணிக்குத் திரும்பிய ஆசிரியர்கள் மீது எடுக்கப்படும் கல்வித்துறையின் பழிவாங்கும் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும்’’ எனக் கல்வியாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சருக்குக் கோரிக்கை மனு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கல்வியாளர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை நிர்வாகிகள் முதலமைச்சருக்கு அனுப்பிய மனுவில், ``9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைக்காகப் போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதியும் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரிலும் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டு தற்போது பணிக்குத் திரும்பியுள்ளோம்.
இந்தச் சூழலில்தான் கடந்த ஜனவரி 30-ம் தேதி குறிப்பிட்ட நேரத்துக்குப் பள்ளிக்குள் வரவில்லை என்று ஆசிரியர்களை பணியில் சேர அனுமதிக்கவில்லை. பணியில் சேர மறுப்பதோடு, அவர்களுக்கு மாற்றுப்பணி ஆணை வழங்கவும் வழங்கிட முயற்சி செய்வது வேதனைக்குரியது.
தேர்வு நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும். 2018-ல் குறிப்பிட்ட இயக்குநரின் ஆணையையும் ஆசிரியரின் விண்ணப்பக் கடிதம் என்ற பதத்தையும் பயன்படுத்தி, 27.01.2019 இயக்குநரின் உத்தரவை மேற்கோள் காட்டி ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்ய முயல்வது கண்டனத்துக்குரியது. 

பணிக்குத் திரும்ப விருப்பத்துடன் வந்த ஆசிரியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் ஆசிரியர்களை மீண்டும் போராட்டக் களத்துக்குத் தள்ளவே வழிவகை செய்கிறது. இதனால், மீண்டும் மிகப்பெரிய போராட்டங்கள் முன்னெடுக்க வாய்ப்புள்ளது. எனவே, கல்வித்துறை பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளனர்

Post a comment

0 Comments