பழைய ஓய்வூதிய பரிசீலனைக் குழு பரிந்துரைகள் படி அரசு நடவடிக்கை எடுக்கும்- முதல்வர்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் சாத்தியக் கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் பழனிசாமி செவ்வாய்க்கிழமை பேசியது.
புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆராய ஒருநபர் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அரசிடம் அளித்துள்ள பரிந்துரைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோன்று, ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைய அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவின் பரிந்துரைகளையும் அரசு ஆராயும் என்று முதல்வர் பழனிசாமி பேசினார்.
Post a Comment