பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரைக் கைது செய்யும் நடவடிக்கையை மாநில அரசு கைவிட
வேண்டும்; அவர்களை அழைத்துப் பேச வேண்டும் என்றார் பா.ம.க. மாநிலத் தலைவர்
ஜி.கே.மணி.
இதுகுறித்து அரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது :
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரைக் கைது செய்யும் நடவடிக்கை தவறானது. எனவே, அரசு ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கைகளைக் கைவிட்டு, ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை தமிழக அரசு அழைத்துப் பேச வேண்டும்.
மரவள்ளிக் கிழங்கு விலை வீழ்ச்சியால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மரவள்ளிக் கிழங்குகளுக்கு உரிய விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
கடலில் கலக்கும் காவிரி உபரி நீரை தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்ப வேண்டும். சென்னை முதல் சேலம் வரையிலான 8- வழி சாலை திட்டத்தால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்தத் திட்டத்தைக் கைவிட்டு, அரூர் வழியாகச் செல்லும் வாணியம்பாடி-சேலம் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சென்னை, சேலம் ஆகிய பெரும் நகரங்களை இணைக்கும் பிற நெடுஞ்சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
2019 மக்களவைத் தேர்தலில் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிடும். ஆனால், தமிழகத்தில் பா.ம.க. எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து தேர்தல் நேரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். தற்போது, பா.ம.க. கூட்டணி குறித்து ஊடகங்களில் தெரிவிக்கப்படும் கருத்துகள், செய்திகள் தவறானவை என்றார்

Post a Comment