புதுடெல்லி: சுபாஷ் சந்திர போஸின் இந்திய ராணுவப் படையில் பணியாற்றிய மூத்த வீரர்கள் முதல்முறையாக குடியரசு தின விழாவில் பங்கேற்கின்றனர்.
70-வது இந்திய குடியரசு தின விழா கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்த ஆண்டு அணிவகுப்பு அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவப் படையில் பணியாற்றிய 4 மூத்த வீரர்களும் இந்த அணிவகுப்பில் முதல் முறையாகப் பங்கேற்கின்றனர்.
குடியரசு தினவிழாவில் இந்திய தேசிய ராணுவ வீரர்கள், கொண்டாட்டம்:
Post a Comment