கடந்த ஒரு மாதத்தில் பெரிய அளவிலான 50 வரி
ஏய்ப்புகளுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவை எல்லாமே ரூ.5
லட்சத்துக்கு மேல் பிடித்தம் செய்யப்பட்ட வரியை செலுத்தாதது தொடர்பானவை.
மாத சம்பளக்காரர்கள் வருமான வரிக்கணக்கு
தாக்கலில் சிறு தவறு செய்தாலும் ஒட்டுமொத்தமாக நோட்டீஸ் அனுப்பப்படுவதாக
வெளியான தகவலுக்கு வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
வருமான வரிசெலுத்தும் மாத சம்பளதாரர்கள், கணக்கு தாக்கலின் போது சிறு
தவறு செய்திருந்தாலும் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்
அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகின.
இதற்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதில்,
“வருமான வரிக்காக ஊழியர்களிடம் சம்பளத்தில் பிடித்தம் செய்யும்
நிறுவனங்கள், அந்த வரியை உரிய நேரத்தில் வருமான வரித்துறையிடம் செலுத்தாமல்
இருப்பது குற்றம் ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “இந்த குற்றத்தில் ஈடுபட்ட தனியார் நிறுவனங்கள், தங்கள் மீதான
நடவடிக்கையை தடுப்பதற்காக திட்டமிட்டு இத்தகைய வதந்திகளை பரப்பி வருகின்றன”
என்று குறிப்பிட்டுள்ளது.
“ரூ.5 லட்சத்துக்கு மேல், வரி பிடித்தம் செய்யப்பட்டு, அது வருமான
வரித்துறையிடம் ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு மட்டுமே நோட்டீஸ்
அனுப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக, மும்பையில் உள்ள வருமான வரி டி.டி.எஸ். அலுவலகம் கடந்த ஒரு
மாதத்தில் பெரிய அளவிலான 50 வரி ஏய்ப்புகளுக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பி
உள்ளது. அவை எல்லாமே ரூ.5 லட்சத்துக்கு மேல் பிடித்தம் செய்யப்பட்ட வரியை
செலுத்தாதது தொடர்பானவை. எனவே, எப்படி பார்த்தாலும், இதை ஒட்டுமொத்தமாக
துன்புறுத்தும் நடவடிக்கையாக கருத முடியாது” இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.
Post a Comment