தமிழகத்தில் வருமான, இருப்பிட, சாதி சான்று
உட்பட 20 வகையான சான்றிதழ்கள், சமூக நலத்துறையின் மூலம் வழங்கப்படும் 7
வகையான உதவிகள், இணையவழி பட்டா மாறுதல் போன்ற சேவைகளை இ-சேவை மையங்கள்
மூலம் பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.
தற்போது இவற்றில் 20 வகையான சான்றிதழ்களை வீடுகளில் இருந்தபடி https://www.tnesevai.tn.gov.in/citizen/ என்ற
இணையம் மூலம் விண்ணப்பித்துப்பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும்
UMANG என்னும் 'ஆண்ராய்ட்' செயலி மூலமாகவும் சாதி, இருப்பிட, வருமானம் ஆகிய
சான்றிதழ்களை பொதுமக்கள் பெறமுடியும். சேவை கட்டணமாக ரூ.60 இணையம் வழியாக
செலுத்த வேண்டும், என கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்தார்
Post a Comment