Title of the document

முட்டையை ஃபிரிட்ஜில் எங்கே வைக்க வேண்டும் தெரியுமா?

அர்த்த ராத்திரியானாலும், அவசர காலையானாலும் பசிக்கும், ருசிக்கும் துணையான முட்டை பிரிட்ஜில் இருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் முட்டை கெடாமல் இருப்பது அதைவிட முக்கியம் இல்லையா? 

ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் முட்டை விரைவில் கெட்டுப் போவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார் ஆராய்ச்சியாளர் லாட்கா லேக்.
ஆம். பொதுவாக ஃபிரிட்ஜின் கதவுப் பகுதில் உள்ள பிளாஸ்டிக் ‘முட்டைக் கூடை’யில் தான் முட்டைகளை வைக்கிறோம். முட்டைக்கு சீரான சீதோஷ்ண நிலை அவசியம். ஃபிரிட்ஜின் கதவு திறந்து மூடும்போதெல்லாம் சீதோஷ்ண நிலை மாறும். அப்படி மாறும்போது, கதவருகில் வைத்திருக்கும் முட்டைகள் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகமாம்.

அப்படியென்றால், முட்டைகளை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாதா?

தாராளமாக வைக்கலாம். ஆனால், கதவுப் பகுதியில் வைக்காமல் உள்ளே வைத்தால்தான், முட்டை சீக்கிரம் கெடாமல் இருக்கும் என்கிறார் லாட்கா லேக். ஆக, ஃபிரிட்ஜின் கதவருகே முட்டையை வைக்காமல், உள்ளே சீரான சீதோஷணத்தில் வைத்தால், முட்டை கெடாது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post