Title of the document
அங்கன்வாடிகளில் துவக்கப்பட உள்ள, எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு, ஆசிரியைகளை மட்டும் நியமிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளி கல்வித் துறையில், பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றாக, அரசு பள்ளிகளை ஒட்டிய பகுதிகளில் உள்ள, அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
மாநிலம் முழுவதும், 2,000 அங்கன் வாடிகள், இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில், 58 ஆயிரம் குழந்தைகள் படிக்க உள்ளனர்.அவர்களுக்கு, தினமும், இரண்டு மணி நேரம் பாடம் எடுக்கும் வகையில், பள்ளி கல்வித் துறையில் பணியாற்றும், அரசு பள்ளி ஆசிரியர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி, மாநிலம் முழுவதும், அங்கன்வாடிகளுக்கு அருகேயுள்ள தொடக்கப் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர் பட்டியல் எடுக்கப்பட்டு உள்ளது.அவற்றில் உள்ள பெண் ஆசிரியர்களை மட்டும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மாற்ற வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post