Title of the document
கட்டாயக் கல்வி உரிமை சட்டம் மத்திய அரசு கடந்த 23/08/2010 ல் கொண்டு வந்தது. இதை தமிழகத்தில் கொண்டுவந்து அரசு பள்ளிகள் , சிறுபான்மையினர் பள்ளிகள்,  அரசு உதவிபெறும் பள்ளிகள் என அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆசிரியர் நியமனங்கள் செயதல் தொடர்பாக முறையான வழிகாட்டுதல் இல்லாத சூழலில் பல்வேறு குழப்பங்கள் நிலவின.  TNTET கட்டாயம் என்ற நிபந்தனைகளில் பல்வேறு ஆசிரியர்கள் கொண்டுவரப்பட்டனர். இந்த காலகட்டங்களில் பணி நியமனம் பெற்றவர்கள் , ஊதியம் மற்றும்  இதர படிகள்  பெற்று வந்தாலும்  TNTET நிபந்தனைகளில் அடங்குவர் என பின்னர் தெரிவிக்கப்பட்டது.

சரியாக கூற வேண்டுமாகில் 16/11/2012 க்கும் முன்பு பணி ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்ற அனைவருக்கும் TET கட்டாயம் என்று தமிழக அரசு கூறியது.

TNTET நிபந்தனை பற்றி முழுவதும் தெரியாத சமயத்தில் பணியில் சேர்ந்த எங்களுக்கு TNTET லிருந்து விலக்கு வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை பல்வேறு ஆசிரியர்கள் நாடினர்.

பல்வேறு காலகட்டத்தல் வந்த தீர்ப்புகள் மூலமாக அரசு பள்ளி ஆசிரியர்கள், மைனாரிட்டி என ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள்  TNTET லிருந்து விலக்கு பெற்றனர். ஆயினும் அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் அற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

கடந்த ஏழு வருடங்கள் தமிழக அரசிடம் தொடந்து அணுகி வந்தாலும், இன்று, நாளை என தள்ளித் தள்ளி போட்டது.

இந்த நிலையில் கடந்த 07/09/2018 இல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கு தீர்ப்பை வழங்கியது. மாண்பமை நீதிபதி S.M. சுப்பிரமணியம் கீழ் தீர்ப்பு வந்தது. அதன்படி, TNTET நிபந்தனைகளில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத அளவில் தமிழக அரசின் அரசாணைகள், தரவுகள், செயல்முறைகள் முதலியனவற்றை ஆராய்ந்து ஓரு முடிவை எடுக்க வேண்டும் எனவும், 07/01/2019 க்குள் அதனை நீதிமன்றத்தில் அல்லது மக்கள் மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு இட்டார்.


இந்த தீர்ப்பை கேட்ட  16/11/2012 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நிம்மதியடைந்தனர்.

ஆயினும் 07/01/2019 நெருங்கி வரும் இந்த நேரத்தில் இன்னும் தமிழக அரசு அரசாணை வெளிவிடவில்லை.

தற்போது ஊடகங்கள் வாயிலாக வரும் 2019 மார்ச் 31 தான் இந்த நிபந்தனை ஆசிரியர்களுக்கு கடைசி நாள் என செய்திகள் பரவுவதால் மீண்டும் 16/11/2012க்கு  முன்பு பணியில் சேர்ந்த   ஆசிரியர்கள் கவலை அடைந்து  உள்ளனர்.
ஆகவே  தமிழக அரசு இந்த  சிக்கல் தீர்க்க விரைவில்   கொள்கை மாற்றம் செய்து   உயர்நீதிமன்றம்  உத்தரவு அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் அரசாணை வெளிவிடும் என TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பு   வேண்டுகிறது.  இந்த வேண்டுகோளை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழக கல்வித்துறை அமைச்சர் மற்றும் கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் முன்மொழிவு செய்கிறோம்.

- ஆ.சந்துரு,
பட்டதாரி ஆசிரியர்,
TNTET நிபந்தனை ஆசிரியர் கூட்டமைப்பு, கோவை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post