Title of the document

ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தையடுத்து, விழுப்புரம் அருகே அரசுப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் பாடம் நடத்தினார்.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய காலவரையற்ற வேலைநிறுத்தத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி ஆய்வு மேற்கொண்டார்.

 விழுப்புரம் அருகேயுள்ள வழுதரெட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் அவர் ஆய்வு நடத்தினார்.

அங்கு தலைமை ஆசிரியர் உள்பட 10 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். அவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டினார்.

பின்னர், அரசு ஆரம்பப் பள்ளிக்குச் சென்றார்.
அங்கு 5 ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை.

 இதையடுத்து, ஆசிரியர்கள் இல்லாமல் இருந்த 3-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் பாடம் நடத்தினார்.

தமிழ், ஆங்கிலப் பாடங்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் சரளமாக பதிலளித்தனர். பின்னர், தாமதமாக பணிக்கு வந்த 3 ஆசிரியர்கள் வகுப்புகளை கவனித்துக் கொண்டனர்.

 போராட்டத்தில் பங்கேற்காத ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி தெரிவித்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post