ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு வருபவர்களை மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் திருப்பி அனுப்புவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 4வது நாளாக அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தகுதியானவர்களை தற்காலிகமாக நியமித்து பாடங்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்திற்கு ஏராளமான ஆசிரியர்கள் வந்த வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் கூறாமல் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. தற்காலிக ஆசிரியர் பணிக்காக ஆர்வத்துடன் வருவோர் யாரை அணுகுவது என்ற குழப்பத்தில் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
ஆசிரியர்கள் வராததால் மூடப்பட்ட பள்ளிகள்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் எதிரொலியாக ஆசிரியர்கள் பள்ளிக்கு வராததால், அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மூடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிக்கு ஆர்வமுடன் வந்த மாணவ, மாணவிகள், ஏமாற்றத்துடன் செய்வதறியாது நின்றனர். இதனை கண்ட கிராம மக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏழை மாணவர்களின் கல்வியை கருத்தில் கொள்ளாமல், பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிவரும் ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment