WhatsApp upcoming features Fingerprint lock Stickers integration and more.
வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் மிரட்டலான சில புதிய சிறப்பம்சங்களை அதன் அடுத்த அப்டேட்டில் அறிமுகம் செய்யவுள்ளதென்ற தகவல் உறுதியாகி உள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் மிரட்டலான சில புதிய சிறப்பம்சங்களை அதன் அடுத்த அப்டேட்டில் அறிமுகம் செய்யவுள்ளதென்ற தகவல் உறுதியாகி உள்ளது. பிங்கர்பிரிண்ட் லாக், ஸ்டிக்கர் இன்டெகிரஷன் அம்சம், 3டி டச் ஆக்ஷன் ஸ்டேட்டஸ் மற்றும் பல சிறப்பம்சங்கள் வெளியிடப்படும் என்று வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் நிறுவனம் சோதனை செய்து வந்த தனது பீட்டா வெர்ஷனில் பிங்கர்பிரிண்ட் லாக், ஸ்டிக்கர் இன்டெகிரஷன் அம்சம், 3டி டச் ஆக்ஷன் ஸ்டேட்டஸ் மற்றும் பல சிறப்பம்சங்களின் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மிக விரைவில் ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் கிடைக்குமென்று வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கான புதிய வாட்ஸ் ஆப் அம்சங்கள்:
1. பிங்கர்பிரிண்ட் லாக்:
2. ஆடியோ பிக்கர்:
வரவிருக்கும் வாட்ஸ் ஆப் அப்டேட்டில் பயனர்கள் தங்களின் தொடர்புகளுக்கு ஆடியோ அனுப்புவதற்கு முன்பு ஆடியோ பைல்களை பிளே செய்து கேட்டுக்கொள்ளும் வசதியை விரைவில் அறிமுகம் படுத்த உள்ளது. கூடுதலாக, உங்கள் தொலைப்பேசியில் உள்ள அனைத்து ஆடியோ பைல்களும் பயன்பாட்டில் பட்டியலிடப்படும். இந்தச் சேவை
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன் 2.19.1 இல் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 ஆடியோ பைல்கள் அனுப்ப முடியும் என்பது கூடுதல் செய்தி.
3.ஸ்டிக்கர் இன்டெகிரஷன்:
புதிய ஸ்டிக்கர்ஸ் ஒருங்கிணைப்பு அம்சம் பயனர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் சாட்களில் ஸ்டிக்கர்களைப் பகிர மூன்றாம் தரப்பு பயன்பாட்டைப் பயன்படுத்த இந்த அம்சம் அனுமதிக்கிறது. முதல் முறையாக புதிய ஜிபோர்டு (GBoard) சேவையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், பயனர்கள் ஸ்டிக்கர் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் அனுமதியை வழங்குகிறது.
4.3டி டச் ஆக்ஷன் ஸ்டேட்டஸ்:
ஐபோன் பயனர்களுக்கான இந்த அம்சம் விரைவில் ஐபோனில் மட்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 3டி டச் மூலம் ஸ்டேட்டஸ்களின் நிலைமையைச் பார்த்துக் கொள்ளலாம். தற்போது, இந்த அம்சம் ஐபோன் வாட்ஸ் ஆப் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Post a Comment