ஆதார் பதிவு உள்ளிட்டவற்றால், பயோ மெட்ரிக் வருகைப் பதிவை, தர்மபுரி மாவட்டத்தில் செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்வித்துறை அலுவலகங்களில் கடந்த, 10 நாட்களுக்கு முன் ஆசிரியர்கள், அலுவலர்கள் பதிவேட்டை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்ய, 100 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதையடுத்து, தர்மபுரி மாவட்டத்துக்கு, 468 பயோ மெட்ரிக் பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டன. இதே போன்று, பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன. அதன்படி, நேற்று முதல் பயோ மெட்ரிக் பதிவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால், தர்மபுரி மாவட்டம் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பயோ மெட்ரிக் பதிவில், ஆசிரியர்கள், அலுவலர்களின் ஆதார் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளன. இதனால், பயோ மெட்ரிக் வருகை பதிவை முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும் என்ற போதும், ஆசிரியர்கள், கல்வி அலுவலக பணியாளர்கள், முழுமையாக பள்ளி, அலுவலக நேரங்களில் பணியாற்றுவதை உறுதி செய்யும் வகையில், கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்
Post a Comment