2011 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்கக்கோரிய அரசாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு.....
அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி வகுப்புகளை துவங்குவது தொடர்பாக எட்டு வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசின் தமிழ் வழிப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் வகுப்புகளை நடத்த கோரி திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழக அரசு கல்விக்காக ஆண்டுக்கு 27 ஆயிரம் கோடி செலவிட்டும், ஆங்கில பேச்சுத்திறன் இல்லாததால், உயர்கல்வி வேலைவாய்ப்பு பாதிப்பதாக மனுவில் கூறியிருந்தார். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி வகுப்புகளை நடத்த கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி வகுப்புகள் துவங்குவது என்பது மாநில கல்விக் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறியது. அப்பாவு அளித்த மனுவை பரிசீலித்து எட்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை செயலாளருக்கும் உத்தரவிட்டது.
மேலும், 2011-க்கும் முன் கட்டப்பட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றுள்ளதால் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை பொருந்தாது; புதிய கட்டடங்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவித்துள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment