சென்னை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் ஒருலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நேற்று மட்டும் 2 ஆயிரத்து 582 அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி வகுப்புகளில் 52 ஆயிரத்து 900 மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். நீதி போதனை வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், யோகா மற்றும் விளையாட்டு துறையில் மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment