Title of the document
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் சஸ்பெண்ட் - ஆணை வழங்கப்பட்டது

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடி வினையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

கடந்த 22-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத கால நிலுவை தொகையினை வழங்க வேண்டும்.

3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் முடி வினையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது.

கடந்த 22-ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடித்தது. தமிழகத்தில் பெரும்பாலான ஊர்களில் தொடக்கப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலைக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர்களுக்கு தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டையில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 14பேரை பணியிடை நீக்கம் செய்து  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.  பூவண்ணன்,செல்லதுரை,தாமரைச்செல்வன்,யோகராஜா, சாலை செந்தில்குமார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முத்துச்சாமி,சோமசுந்தரம்,கோலாச்சி,  உட்பட 14 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் கைதான 57 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோவை சேர்ந்த 57பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். விருதுநகரில் 22, நெல்லையில் 9, தஞ்சையில் 8 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 10 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் 36 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமக்கல் மாவட்டத்தில் கைதான 57 ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோவை சேர்ந்த 57 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு கைதாகி சிறையில் உள்ள 14 ஆசிரியர்கள் உட்பட 15 பேர் பணியிடை நீக்கம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே போல், திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்ட 6 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமடையும் எனக்கூறப்படுகிறது.

திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பூவண்ணன், செல்லதுரை, தாமரைச்செல்வன், யோகராஜா, சாலைசெந்தில்குமார் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post