Title of the document
நாளை குடியரசு தின விழாவை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது 17 பி என்ற பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்
என்று சென்னை முதன்மைக்கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17b நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் அவர்கள் பணி இடத்திற்கு தகுதியுள்ள வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார். உடனடியாக பணிக்கு திரும்பினால், சம்பளம் மட்டும் பிடிக்கப்படும். 17 b யின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது எனவும் கூறியுள்ளார்.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டது. இதனிடையே, தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post