பத்தாம் வகுப்பு மாணவர் விபரங்களில் உள்ள பிழைகளை திருத்த, ஆசிரியர்களுக்கு
தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும்
மாணவர்களின் விபரங்களை, செப்டம்பரில் பள்ளிகளில் பதிவு செய்தனர். அதில்,
மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளியின் பெயர் போன்ற
விபரங்கள், இடம் பெற்றுள்ளன.இதில், சில மாணவர்களின் பெயர்களில், பிழைகள்
உள்ளதை, தேர்வுத்துறை கண்டறிந்துள்ளது. எனவே, பத்தாம் வகுப்பு சான்றிதழில்
பிழைகள் வராமல் தடுக்கும் வகையில், மாணவர் விபரங்களில் உள்ள பிழைகளை
திருத்த, தேர்வுத்துறை அவகாசம் அளித்துள்ளது.இதற்கான வசதிகள், நேற்று
ஆன்லைனில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி ஆசிரியர்கள், www.dge.tn.gov.in
என்ற இணையதளத்தில், வரும், 27க்குள் பிழைகளை திருத்த, தேர்வுத்துறை
இயக்குனர், வசுந்தராதேவி அறிவுறுத்தியுள்ளார்.
Post a Comment