பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க ஏதுவாக நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
இதுவரை சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது முதல் முறையாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாக இருந்து வந்தது.
இந்த நிலையில், பல ஆண்டு கால கோரிக்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
Post a Comment