Title of the document


TN schools செயலியில், ஒவ்வொரு ஆசிரியரும் எந்த வகுப்பிற்கு கற்பிக்கிறார் என்பது பல பள்ளிகளில் ஏற்கனவே பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர், அவர் வகுப்பிற்கு மட்டும் ஆன்லைன் வருகையை பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுமானவரை, ஒரே கைபேசியிலிருந்து அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வருகை பதிவு செய்வதை தவிர்ப்பது நல்லது.

ஆசிரியர்கள் பெயர், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, கற்பிக்கும் வகுப்பு போன்ற அனைத்து விவரங்களும் EMIS இணைய தளத்தில் பதிவு செய்திருப்பதால், சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் அவர் வகுப்பிற்கு மட்டும், அவரின் சொந்த கைபேசி மூலம் மாணவரின் ஆன்லைன் வருகை பதிவு செய்வதால், அன்றைய தினம் அவர் பள்ளிக்கு வருகை தந்துள்ளார் என்பது உறுதி செய்யப்படுகிறது.

அனைத்து வகுப்பாசிரியர்களும் முற்பகல் மற்றும் பிற்பகல் ஆன்லைன் வருகை பதிவு செய்துள்ளனரா?

பச்சை கலர் டிக் அனைத்து வகுப்புகளுக்கும் காண்பிக்கிறதா? என்பதை தலைமை ஆசிரியர் தினமும் இரண்டு வேளைகளிலும் (மு.ப. / பி.ப)  சரி பார்ப்பது நல்லது.

ஆன்லைன் பதிவு நேரம்  முற்பகல் 9.30 மணி மற்றும் பிற்பகல் 1.30 மணி.

 ஏதேனும் ஆசிரியர் சரியாக பதிவிடா விட்டால், தலைமை ஆசிரியரும் பொறுப்பேற்க நேரிடும் என்பதால், தலைமை ஆசிரியர்கள் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

விரைவில் ஆசிரியர்களுக்கு ஆதார் எண் அடிப்படையிலான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நடைமுறை படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.

காலை 9.30 க்கு மேல் மதியம் 11.55 வரை தாமதமாக வரும் மாணவர்களையும் பதிவு செய்ய இயலும். ஆனால் ஆசிரியர் மறதியாக 10 மணிக்கு பதிவு செய்தால், அனைத்து மாணவர்களும் தாமதமாக வந்ததாக கணக்கிடப்படும். மேலும் ஆசிரியர் தாமதமாக வருகை புரிந்தாரா? என்ற சந்தேகமும் எழ வாய்ப்புள்ளதால் மிகச் சரியாக காலை 9.30 மணிக்கு பதிவு செய்வது நல்லது.

ஆனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் ஆன்லைன் வருகைப் பதிவு செய்வதால் சர்வர் மெதுவாக வேலை செய்கிறது. இதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, சர்வரின் திறன் மேம்படுத்தப்பட்டால், இந்த சிக்கலுக்கு தீர்வு காண இயலும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post