Title of the document

NMMS தேர்வு நினைவூட்டல் தகவல் :
👉 *தேர்வு நாள்* :
*நாளை (15.12.2018 - சனி)*
👉 *தேர்வு நேரம்* :
*மு.ப.9.30 - பி.ப.1.00*

👉மாணவர்கள் *அரை மணி நேரம் முன்னதாகவே 9.00 மணிக்குள்* தேர்வு மையம் சென்று விடவும். 

👉 *உரிய தேர்வு மையத்தினை நுழைவுச்சீட்டினை பார்த்து உறுதி* செய்து கொள்ளவும்.

👉நுழைவுச் சீட்டு (Hall Ticket ) எடுத்து செல்லவும். நுழைவு சீட்டில் *பள்ளித் தலைமையாசிரியர் கையொப்பம் ( பள்ளி முத்திரையுடன்)* இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்

👉தேர்வில் OMR விடைத்தாளில் *கருப்பு (அ) நீலம் பந்து முனை பேனா* பயன்படுத்தவும். 

👉தேர்வு எழுதுவதற்கான கால அவகாசத்தை சரியாக பின்பற்றவும். 

👉தேர்வில் OMR விடைத்தாளில் ஏதேனும் *வினாக்களுக்கு விடையளிக்காமல் விடுபட்டுள்ளதா* என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

👉மாணவர்கள் தேர்விற்கு *சீருடையில்* செல்வது சிறப்பு.

👉இன்று ~*இரவு வெகு நேரம் படிப்பதையும், நாளை தேர்வு மைய வளாகத்தில் அதிகம் படிப்பதையும்*~ தவிர்க்கவும். இது தேவையில்லாத பதற்றத்தை தரும்.
தேர்வில் _*பதற்றமில்லாத அமைதியான மனநிலை*_ நல்ல மதிப்பெண்களை பெற்றுத் தரும்.
👉தேர்விற்கு முன்னதாக *காலை சிற்றுண்டியிலும் கவனம்* தேவை. ~*பூரி , பொங்கல்*~ போன்ற உணவு வகைகளை தவிர்த்து ✅ *இட்லி,சாதம்*✅போன்ற உணவு வகைகளை உட்கொள்வது நல்லது.

👉 *நேர்மறையான எண்ணம் வெற்றியைத் தரும்.*
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதி *வெற்றி பெற வாழ்த்துகள்.*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post