Title of the document
பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, நவ., 1ல் விண்ணப்ப பதிவு துவங்கியது. ஆன்லைன் வழியில், நவ., 30ல் விண்ணப்ப பதிவு முடியும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், பொது பிரிவினரில், 25 வயதுக்கு அதிகமானவர்களும், நீட் தேர்வில் பங்கேற்கலாம் என, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு, ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. அந்த கூடுதல் அவகாசம், நாளை மறுநாள் முடிகிறது.மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு, விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளுமாறு, மாணவர்களுக்கு நீட் தேர்வை நடத்தும், தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post