Title of the document


டிசம்பர் 5 (December 5) கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார்.
1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.
1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.
1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1746 – எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.
1757 – ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார்.
1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.
1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.
1931 – மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.
1934 – இத்தாலியப் படையினர் அபிசீனியாவின் வால் வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்களின் பின்னர் நகரைக் கைப்பற்றினர்.
1936 – சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.
1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டையில், கியோர்கி சூக்கொவ் செருமனிய இராணுவத்துக்கு எதிராகப் பெரும் சோவியத் எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, உருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.
1952 – இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.
1957 – இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.
1958 – பங்களிப்போர் தொலை சுழற்சி முறை (எஸ்ரிடி) தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.
1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.
1977 – சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது.
1978 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
1983 – அர்கெந்தீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
1995 – ஈழப் போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.
2003 – இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
2005 – தங்கனீக்கா ஏரியில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் காங்கோவில் ஆறு பேர் உயிரிழந்தனர்.
2006 – பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.
2006 – இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றார்.
2013 – யெமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.
2017 – 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட உருசியாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது.

பிறப்புகள்

1782 – மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (இ. 1862)
1879 – பாகாஜதீன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், போராளி (இ. 1915)
1890 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (இ. 1976)
1896 – கார்ல் பெர்டினான்ட் கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1984)
1901 – வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர் (இ. 1966)
1901 – வெர்னர் ஐசன்பர்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1976)
1905 – சேக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி (இ. 1982)
1919 – மொகிதீன் பேக், இலங்கைத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1991)
1927 – டபிள்யூ. டி. அமரதேவா, சிங்களப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2016)
1927 – பூமிபால் அதுல்யாதெச், தாய்லாந்து மன்னர் (இ. 2016)
1930 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (இ. 2001)
1960 – சரிகா, இந்தியத் திரைப்பட நடிகை
1966 – தயாநிதி மாறன், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி

இறப்புகள்

1784 – பில்லிஸ் வீட்லி, செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753)
1791 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (பி. 1756)
1870 – அலெக்சாண்டர் டூமா, பிரான்சிய எழுத்தாளர் (பி. 1802)
1879 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி (பி. 1822)
1926 – கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (பி. 1840)
1930 – ஆல்பிரட் பார்னார்டு பாசெட், பிரித்தானியக் கணிதவியலாளர் (பி. 1854)
1941 – அம்ரிதா சேர்கில், அங்கேரி-பாக்கித்தானிய ஓவியர் (பி. 1913)
1950 – அரவிந்தர், இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1872)
1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1899)
1963 – உசைன் சகீத் சுராவர்தி, பாக்கித்தானின் 5வது பிரதமர் (பி. 1892)
1964 – வி. வீரசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1892)
1969 – பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் (பி. 1885)
2009 – திலகநாயகம் போல், யாழ்ப்பாண கருநாடக இசைப் பாடகர்
2012 – ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1907)
2013 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் 1வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)
2016 – ஜெ. ஜெயலலிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி, தமிழக முதலமைச்சர் (பி. 1948)

சிறப்பு நாள்

குழந்தைகள் நாள் (சுரிநாம்)
உலக மண் நாள்
பன்னாட்டுத் தன்னார்வலர் நாள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post