Title of the document



நீட் பயிற்சி பெறும் மாணவர்களின் வருகையை நூறு சதவீதம் தலைமைஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா

புதுக்கோட்டை,டிச.11: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கூட்டம் அருள்மிகுபிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் நடைபெற்றது..

தலைமையாசிரியர்கள் கூட்டத்தினை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா பேசியதாவது: புதுக்கோட்டை மாவட்ட மாணவர்களின் நலன் கருதி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  அவர்கள் நமது மாவட்டத்திற்கு மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்துள்ளார்கள்..எனவே இந்தாண்டு நமது நீட்பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட மருத்துவக்கல்லூரியில் அதிகளவில் இடம்பெற வசதியாக அந்த மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியை அளித்திட வேண்டும்.பயிற்சிக்கு வரும் மாணவர்களின் வருகையினை நூறுசதவீதம் தலைமையாசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்..கஜாபுயலினால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 47000 மின்கம்பங்கள்,650 கிலோமீட்டர் தூரமுள்ள மின்கம்பிகளும் சேதமடைந்தன..ஆனால் அதனை சரிசெய்யும் பணியில் நமதுமாவட்ட,வெளிமாவட்ட,வெளி மாநில மின் ஊழியர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.அரசு எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக நாம் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளோம்.எனவே கஜாபுயலின் தாக்கம் குறித்தும்,சேதம் குறித்தும்,மீண்டது குறித்தும் மாணவர்கள் அறிந்திடும் வகையில் தலைமைஆசிரியர்கள்,ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கூறிட வேண்டும். மேலும் இந்தாண்டு அரசு பொதுத் தேர்வு எழுதும்  மாணவர்களுக்கு செய்முறை பயிற்சியினை மிக விரைவில் முடித்திட வேண்டும்.அரசு பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தை முதன்மை மாவட்டமாக உயர்த்திட தலைமைஆசிரியர்களும்,ஆசிரியர்களும் உழைத்திட வேண்டும்.மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தக் கூடிய மன்றச் செயல்பாடுகளை ஒவ் வோர்   பள்ளியிலும் நடத்தி  மாதந்தோறும் முதன்மைக் கல்வி அலுவலத்துக்கு அறிக்கை அளித்திட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன்,இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன்,ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் கி.பழனிவேலு,முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் ஜீவானந்தம்,கபிலன் மற்றும்  பள்ளிக்கல்விதுணைஆய்வாளர்கள்,தலைமையாசிரியர்கள் கலந்து கொண்டனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post