Title of the document
பள்ளிப் பாடத்திட்டத்தை பாதியாக குறைக்கப் போவதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த  கலைவிழா ஒன்றில் கலந்து கொண்ட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனது சிறப்புரையில், மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்வதற்கு ஏற்ப போதிய நேரம் ஒதுக்கித்  தர வேண்டும். அதனால், தற்போதுள்ள பாடத்திட்டத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளோம்’’ என்று கூறியுள்ளார். மத்திய மனித வளமேம்பாட்டுத் துறையின் சார்பில்,

தேசிய கல்விக் கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(NCERT)தான் ஒருங்கிணைந்த பள்ளிப் பாடத்திட்டம் தயாரிக்கிறது. அந்த பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள அம்சங்களை ஒட்டியே, மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் பாடத்திட்டத்தை தயாரிக்கின்றன. என்சிஇஆர்டியின் வரைவு பாடத்திட்டம்  தான் அனைத்து மாநிலங்களிலும் அமலில் உள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டியின் பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள்தான் கற்பிக்கப்படுகின்றன. அவற்றில் மாணவர்களின் வயதுக்கு ஏற்றவாறு பாடத்திட்டங்கள் இல்லை. அளவுக்கு அதிகமாக பாடச்சுமை உள்ளது. அதனால் மாணவர்கள் மனஉளைச்சல் அடைகின்றனர். இது குறித்து பெற்றோர் தரப்பில் மத்திய மனித வள மேம்பாட்டுத் அமைச்சகத்துக்கு பல கருத்துகள், புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன் பேரில்தான் மத்திய அமைச்சர் ஜவடேகர் பேசும்போது, பாடத்திட்டத்தை பாதியாக குறைப்போம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை பொருத்தவரையில், சிபிஎஸ்இக்கு இணையாக பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தற்போது புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது. 1,6, 9, +1 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்களும் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் மத்திய அரசோ, பாடத்திட்டத்தை பாதியாக குறைக்க முடிவு செய்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post