Title of the document
ரூ.5,000 அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதையும் விட்டு விட்டால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டி வரும். கடந்த 2017-18 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. கேரளாவுக்கு மட்டும் வெள்ள பாதிப்பை கருத்தில் ெகாண்டு செப்டம்பர் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பர் 31ம் தேதி வரை ரூ.5,000 அபராதம் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
வரி செலுத்துவோர் தங்கள் வருமான கணக்குகளை தாமதமாக தாக்கல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கும் உரிமை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 2017 பட்ஜெட்டில் கால தாமதத்துக்கு ஏற்ப அபராதம் வசூலிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் வருமான வரிச்சட்டம் 234எப் பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இதன்படி, வருமான வரி கணக்கு சமர்ப்பிக்க வேண்டிய, ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ள தனி நபர்கள் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை உரிய கெடு தேதிக்கு பிறகு டிசம்பர் 31ம் தேதி வரை ரூ.5,000 செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம். டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு, அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31 வரை ரூ.10,000 அபராதம் செலுத்தி தாக்கல் செய்யலாம். ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருவாய் உள்ளவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் ரூ.1,000 அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post