Title of the document

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஜனவரி மாத இறுதிக்குள் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த ஸ்மார்ட் கார்டில் மாணவர்களின் பெயர், முகவரி, புகைப்படம், ஆதார் எண் மற்றும் கியூஆர் கோட் ஆகிய அம்சங்கள் இடம் பெற உள்ளன. இந்த கியூஆர் மூலமாக மாணவர்கள் இந்தியாவில் உள்ள எந்த பள்ளிகளுக்கும் எளிதாக மாறும் வசதிகளை பெற்றதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். 

காஞ்சிபுரம் அரசு பள்ளியில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் விழாவில் பேசிய அவர், பாடத்திட்டங்களுக்கு இடையே பள்ளி மாணவர்களுக்கு நீதிபோதனை வகுப்புகன் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.விழாவின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிப்பதில் எந்த தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 14 இலவச திட்டங்களை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சைக்கிள்கள் தரமானது தான் என தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும், கர்நாடகாவுக்கும் ஒரே நிறுவனம் தான் சைக்கிள் வழங்குவதாகவும், அதனால் ஏற்பட்ட குழப்பங்கள் தற்போது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், விழுப்புரத்தில் வழங்கப்பட்ட சைக்கிள்களின் தரத்தை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, அதன் தரம் குறித்து சான்றிதழ்கள் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post