Title of the document

தமிழகத்தில் கடந்த 2017-18ம் கல்வி ஆண்டு மாநிலம் முழுவதும் 150 மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.இப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 750 பட்டதாரி ஆசிரியர்கள் ₹9.300-₹34,800 என்ற ஊதிய விகிதம் மற்றும் தர ஊதியம் ₹4,600 உடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.
<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<ins class="adsbygoogle"
     style="display:block; text-align:center;"
     data-ad-layout="in-article"
     data-ad-format="fluid"
     data-ad-client="ca-pub-4799046079961966"
     data-ad-slot="6292750611"></ins>
<script>
     (adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>
இவர்கள்  பணி நியமனம் ஓராண்டுக்கு என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது 18.07.2018 முதல் 31.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் ஆர்எம்எஸ்ஏ திட்டத்தின் கீழ் 200  உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு இப்பள்ளிகளிலும் தற்காலிக அடிப்படையில் தலா 6 பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர் என மொத்தம் 1200 பட்டதாரி ஆசிரியர்கள், 200  உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கும் 1.06.2018 முதல் 31.05.2021 தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ₹36,000 முதல் ₹1,15,700 வரையும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ₹2,600 முதல்  ₹65,500 வரையும் புதிய ஊதிய விகிதம் நிர்ணயித்து வழங்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறையும், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்ககமும் வெளியிட்ட இந்த உத்தரவுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post