Title of the document


மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 2018-19ம் ஆண்டிற்கான ஆசிரியர் பொது கலந்தாய்வில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கிடைக்கவில்லை. சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பலர் ரூ.7 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து இடமாறுதல் பெற்றுள்ளனர். எனவே, 2018-19ல் கவுன்சலிங்கில் நடந்த விதிமீறல்கள் மற்றும் ஊழல்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.


இந்த மனுவை நேற்று மீண்டும் விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.ஆதிகேசவலு ஆகியோர், ‘‘கல்வித்துறையின் மே 29ல் வெளியான அரசாணைப்படி 2018-19ம் கல்வி ஆண்டில் நடந்த கவுன்சலிங் தொடர்பான அதிகாரபூர்வ ஆவணங்களை கல்வித்துறை முதன்மை செயலர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். அதில், பணி மாறுதல் பெற்றவர்களின் விபரம் இருக்க வேண்டும். மேலும், கடந்த ஜூன் 18க்கு பிறகு பொதுமாறுதல் மூலம் எத்தனை மாறுதல் வழங்கப்பட்டது. முந்தைய கவுன்சலிங்கில் எத்தனை காலியிடம் ஏற்பட்டது. அந்த காலியிடம் பிறகு காட்டப்பட்டதா, எப்படி நிரப்பப்பட்டது, மாறுதல் பெற்றவர்கள் குறிப்பிட்ட கட்ஆப் காலத்தை பூர்த்தி செய்திருந்தனரா என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  ஒட்டுமொத்தமாக 2018-19ல் கவுன்சலிங் மூலம் மாறுதல் பெற்றவர்கள் விபரம், அது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 3க்கு தள்ளி வைத்தனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post