Title of the document


2009 & TET இடைநிலை ஆசிரியர்கள்  டிசம்பர் 23 ஆம் தேதிமுதல் பட்டினிப் போராட்டத்தை நடத்தி வருகின்றது.
ஒரே கல்வித் தகுதி, ஒரே வகையான பணியில் உள்ள ஆசிரியர்களிடையே சம்பளத்தில் வேறுபாடு ஏன்? சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

31.5.2009-க்குமுன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370; ஒரு நாள் கழித்து அதாவது 1.6.2009 அன்று நியமனமான ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.5,200. ஒரு நாள் இடைவெளிக்காக ரூ.3,170 குறைவு என்பது என்ன நியாயம்?

போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்திலும், பின்னர் டி.பி.அய். வளாகத்திலும் வைக்கப்பட்டுள்ளனர்.
எழுத்தறிவிக்கும் ஆசிரியர்களுக்கு சமச்சீர்மை - பாடத் திட்டம் இருக்கும்போது ஊதியத்திலும் சமநிலை இருக்கவேண்டாமா?

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, ஆசிரியர் கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருமாறு முதலமைச் சரையும், கல்வி அமைச்சரையும் கேட்டுக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை
27.12.2018

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post