
திருக்குறள்
அதிகாரம்:இனியவை கூறல்
திருக்குறள்:100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம்:
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது .
பழமொழி
Necessity is the mother of invention
தேவையே கண்டுபிடிப்பின் தாய்
இரண்டொழுக்க பண்பாடு
* என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
* பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி
சுயநலத்தைக் கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயமான செயல்களில் ஈடுபடு. எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.
- பாரதிதாசன்
பொது அறிவு
1.இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
கங்கை ஆறு
2. இந்தியாவின் நீளமான அணை எது?
ஹிராகுட் அணை (ஒரிசா)
தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்
உளுந்து
1. உளுந்தை தோலுடன் கஞ்சி செய்து சாப்பிடலாம். பருவமடைந்த பெண்களுக்கு உளுந்தை கஞ்சி அல்லது களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும்.
2. உளுந்தைக் கொண்டு செய்த பண்டங்களை உண்டு வர நினைவுத்திறன் அதிகரிக்கும்.
3. உளுந்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன.
4. உடல் சதை வளர்ச்சிக்கு உளுந்து மிகவும் சிறந்தது. மெலிந்த உடல்வாகு உள்ளவர்கள் இதனை களி கிளறி சாப்பிட்டு வர உடல் பருமன் அதிகரிக்கும்.
English words and meaning
Factor -காரணி
Facility- வசதி ,எளிமை
Falkon- ராஜாளி,
வல்லூறு
Fantasy -கற்பனை
Farewell-வழியனுப்புதல்
அறிவியல் விந்தைகள்
மனித மூளை
* மனித மூளையானது மற்ற பாலூட்டிகளின் மூளையின் அளவை விட மூன்று மடங்கு பெரியது
* மனித மூளை 1000 லட்சம் நரம்பு செல்களால் ஆனது
* மனித மூளையானது இன்று வரை உருவாக்க பட்டுள்ள கணிணிகளை விட மிகச் சிக்கலான வடிவமைப்பு, வலிமையானது மற்றும் திறமையானது ஆகும்.
நீதிக்கதை
விடா முயற்சி
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றான். வெற்றி பெற்ற எதிரி அரசனை கொல்ல திட்டமிட்டான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்று அங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.
ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் ஈர்த்தது. குகையின் ஒரு பகுதியினுள் ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கைவிடாமல் மறுபடி மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்? என யோசித்தான்
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.
இன்றைய செய்திகள்
19.11.18
* சென்னையை அடுத்துள்ள எண்ணூர் துறைமுகத்தில் மீண்டும் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதை அடுத்து, கடலோரக் காவல்படைக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
* கஜா புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தேவைக்கு உதவி எண்களை அறிவித்துள்ளது இந்தியன் ஆயில் பெட்ரோலிய நிறுவனம்.
* அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பதிவுகளை நவ.25-ஆம் தேதிக்குள் முடிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
* உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டி காலிறுதிக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை மேரிகோம் தகுதி பெற்றுள்ளார்.
* ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
Post a Comment