ஆசிரியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும்: C.E.O உத்தரவு

ஆசிரியர்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும்' என, திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.சென்னை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை, சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி அரசு ஊழியர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும் என, திண்டுக்கல் மாவட்ட அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டு இருந்தார்.இதன் தொடர்ச்சியாக முதன்மை கல்வி அலுவலர் சாந்தகுமார், கல்வித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், 'கல்வித்துறையில் பணியாற்றும் அத்தனை பேரும் கட்டாயம், தங்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும்போது, 'பணியில் இருக்கும்போது கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் அடையாள அட்டை அணிய வேண்டும். இல்லாதவர்கள், தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.

0 Comments:

Post a Comment