Title of the document
சிவகங்கை மாவட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், தாங்களே களத்தில் இறங்கி, கிராமங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தென் மேற்கு பருவமழை முடிந்து, வட கிழக்கு பருவமழை துவங்கிய இடைப்பட்ட காலத்தில், மாநிலம் முழுவதும், ஆங்காங்கே டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவியது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு, காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தமிழக பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார். காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பெற்ற மாணவர்கள், பொதுமக்களுக்கும், தங்கள் சுற்றுப்புறத்தினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில், மாணவர்கள், தாங்களே களத்தில் இறங்கி, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள், ஒவ்வொரு தெருவாக சென்று, வீடுகள் மற்றும் தெருக்களில், கொசு உற்பத்திக்கு சாதகமாக உள்ள, பயன்படுத்தப்படாத பொருட்களை அகற்ற, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சில இடங்களில், மாணவர்களே களத்தில் இறங்கி, தேவையற்ற பொருட்களை அகற்றினர். மாணவர்களின் இந்த செயலுக்கு, பொதுமக்களிடம் பாராட்டு குவிந்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment