Title of the document

கல்லுாரிகளின் ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கான கவுன்சில் உருவாக்கப்படும்' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

இதில், பதிவு செய்யும்படி, கல்லுாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களிலும், உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் பணிகளில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., கலைக்கப்பட்டு, புதிதாக உயர்கல்வி ஆணையம் அமைக்கப்படும் என, மத்திய அரசு, ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதேபோல, உள்கட்டமைப்பு மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும், கல்வி நிறுவனங்களுக்கு, சர்வதேச அடிப்படையிலான, உயர்தர உயர்கல்வி நிறுவன அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆராய்ச்சி பணிகளை ஊக்கப்படுத்தும் வகையில், புதிய கண்டுபிடிப்புக்கான கவுன்சிலான, 'இண்டியன் இன்னோவேஷன்ஸ் கவுன்சில்' என்ற, ஐ.ஐ.சி., அமைப்பு நிறுவப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தகவுன்சிலில் இணைந்து, ஆராய்ச்சி பணிகளை மேம்படுத்த, கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், தங்கள் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. நவ., 20க்குள், ஏ.ஐ.சி.டி.இ.,யின் இணையதளத்தில், விபரங்களை பதிவேற்ற வேண்டும் என, உயர்கல்வி நிறுவனங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post