
பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத் தாழ்வு இருக்கக்கூடாது என்பற்காக அவர்கள்
சீருடை அணிந்து வர வேண்டும் என்ற முறையை முன்னாள் முதலமைச்சர் காமராஜர்
நடைமுறைப்படுத்தினார். இதன் மூலம் வகுப்பறைகளில் ஏழை, பணக்காரன் என்ற
ஏற்றத் தாழ்வு இல்லாத சமநிலை உருவானது.
இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழக பள்ளிகளில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், கனிணி வகுப்புகள், ஆங்கில வழிக்கல்வி, தொடக்கப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் என அசத்தி வருகிறார்.
இதனிடையே பள்ளி மாணவர்கள் ஒழுக்கத்தை ஆசிரியர்களிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும் என பள்ளிகல்வித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாணவர்களைப் போல ஆசிரியர்களும் பள்ளிக்கு சீருடை அணிந்து வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தற்போது தனியார் பள்ளிகளில் இந்த முறை வழக்கத்தில் உள்ளது. அமைச்சர் செங்கோட்யைன் , அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளைவிட சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும் என முயற்சி எடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு சீருடை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது செயல்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால் தற்போது அரசுப் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளும் சீருடையுடன் பள்ளிக்கு வரத் தொடங்கியுள்ளனர்
Post a Comment