Title of the document
ஓசூர் ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1986 மற்றும் 1987ம் ஆண்டு 10ம் வகுப்பில் படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்காக நீர்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டுள்ளது. இங்கு மேல்நிலை மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் தலா 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து 1986 மற்றும் 1987ம் ஆண்டு படித்த 10ம் வகுப்பு மாணவரும், வழக்கறிஞரும், வழக்கறிஞர் சங்க செயலாளருமான கதிரவன் கூறுகையில், நாங்கள் செய்தது விளம்பரத்திற்காக அல்ல. இது போல தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் ஏதாவது ஒரு உதவி செய்திட முன் வந்தால் போதும். ஒன்றாக செயல்பட்டு அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவோம் என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment