
சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி (தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) பாடப்புத்தகங்களை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் நாடு முழுவதும் சுமார் 18 ஆயிரம் பள்ளிகள் இணைப்பு பெற்றுள்ளன. இந்த பள்ளிகளில் தனியார் பதிப்பகங்கள் அச்சிட்டு விற்கும் புத்தகங்களே பாடப்புத்தகங்களாக வைக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்த புத்தகங்களுக்காக சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதன்பேரில், சென்னையை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில், சென்னையை சேர்ந்த ஒருவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், என்சிஇஆர்டி புத்தகங்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் பாடமாக நடத்த சிபிஎஸ்இ இணைப்பு பெற்ற பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது. ஆனால், நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கண்ட பள்ளிகள் பின்பற்றவில்லை என்ற புகார் இப்போது எழுந்துள்ளது. அதனால், நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த பள்ளிகள் முன்வர வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கருத்து தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிபிஎஸ்இ நிர்வாகத்தின் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து தெரியவில்லை. மேலும், நீதிமன்றத்தில் இருந்து சிபிஎஸ்இக்கு இதுவரை எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று சிபிஎஸ்இ மறுத்துள்ளது. இதனால், கல்வியாளர்கள் பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
இதற்கிடையே மொத்தம் உள்ள 18 ஆயிரம் சிபிஎஸ்இ பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தையே பின்பற்றுகின்றன என்று தெரிவித்துள்ளன. உண்மையில் தனியார் பதிப்பகத்தார் அச்சிட்டு விற்கும் புத்தகங்களை அந்த பள்ளிகள் வாங்குவதாகவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவின்படி சிபிஎஸ்இ பள்ளிகளுக்காக என்சிஇஆர்டி அதிக அளவில் பாடப்புத்தகங்களை அச்சிட்டு குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றை எத்தனை பள்ளிகள் வாங்கின என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இதனால் எந்த புத்தகத்தை பின்பற்றுவது என்ற குழப்பம் நீடிக்கிறது.
Post a Comment