Title of the document
Image result for red alert kaja
கஜா புயல் காரணமாக விடுக்கப்பட்ட
'ரெட் அலர்ட்' எச்சரிக்கையானது தமிழக மக்களுக்கு இல்லை, நிர்வாகத்திற்கு மட்டுமே என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சற்றுமுன் புயலின் வேகம் குறைந்ததால் ஆந்திராவுக்கு விடப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவாக்கி உள்ள காஜா புயல் வரும் 15 ஆம் தேதி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி, கரையை கடக்கும் போது, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்தது இந்திய வானிலை மையம்,
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,

கஜா புயல் அடுத்த12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும். நவம்பர் 15ஆம் தேதி முற்பகல் கடலூர்-பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து வடகிழக்கே 840கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே 750கி.மீ. தூரத்திலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தை நோக்கி 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

வடகடலோர மாவட்டங்களில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மழை பெய்யும் என்றும், தமிழக கடலோர பகுதிகளில் 15ம் தேதி 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24 மணி நேரத்தில் 20 செ.மீ மேல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இன்று மாலையில் இருந்து தமிழகத்தில் புயலுக்கான அறிகுறி தெரியும், அதாவது வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய கூடும்.
தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. 10 தேசிய பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டு அந்ததந்த பகுதிகளுக்கு சென்று முன்னெச்சரிக்ககை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய வானிலை மையம், தமிழகத்திற்கு விடுத்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையானது, பொது மக்களுக்கு இல்லை எனவும், அது அரசு நிர்வாகத்திற்கு மட்டும் தான் என வானிலை மையம் அந்தர் பல்டி அடித்துள்ளது. மேலும், கடந்த வருடங்களில் வந்த தானே புயல், வரதா புயல் போன்றவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் இந்த முறை இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post