மாணவர்களுக்கு காய்ச்சலா? உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் சுகாதார அலுவலர்களுக்கு தகவல் தர தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு


பள்ளி மாணவ, மாணவியர், காய்ச்சலால் விடுப்பு எடுத்தால், உடனடியாக உள்ளாட்சி அலுவலகங்களில் தெரிவிக்க வேண்டுமென, தலைமையாசிரியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊராட்சிகளில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ளது. டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட்டாலும், சாதாரண காய்ச்சல் பாதிப்பை, முழுமையாக தடுக்க இயலவில்லை. மாவட்ட நிர்வாகம், ஒன்றியம் வாரியாக, உதவி இயக்குனர் நிலை அலுவலர்களை நியமித்து, காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளை கண்காணிக்கிறது.
காய்ச்சல் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, சுகாதார பணிகளை முடுக்கிவிட ஏதுவாக, கல்வித்துறை மூலமாக, பள்ளி தலைமையாசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார் கூறியதாவது:ஒவ்வொரு வீட்டிலும், மாணவ, மாணவியர் கட்டாயம் இருப்பர் என்பதால், அவர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்கள், காய்ச்சலால் விடுப்பு எடுத்தால், பள்ளி தலைமை ஆசிரியர், உடனடியாக, உள்ளாட்சி அமைப்புக்கும், சுகாதார அலுவலர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

0 Comments:

Post a Comment