
பிளஸ் 1, பிளஸ் 2 அரையாண்டு தேர்வு தேதியை, மாற்ற வேண்டும்' என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமு, பள்ளிக்கல்வி இயக்குனரிடம், நேரில் மனு அளித்தார்.
அதன் விபரம்: நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுகள், டிச., 10ல் துவங்கி, 22 வரை, நடக்கின்றன. பிளஸ் 1 மாணவர்களுக்கு, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் உள்ளிட்ட தேர்வுகள் நடக்கும் நாட்களில், பிளஸ் 2 மாணவர்களுக்கும், அதே தேர்வுகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆறு மாதங்களுக்கு மேல் பாடம் நடத்திய ஆசிரியர், தேர்வுக்கு முந்தைய நாட்களில், ஒரே நேரத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களை சரியாக கவனித்து, பயிற்சி அளித்து ஊக்கப்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், ஒரு கல்வி ஆண்டில், முழு பாடத்தில் மாணவர்களின் திறனை சோதிக்கும் முதல் தேர்வு அரையாண்டு தேர்வாகும். மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி, அரையாண்டு தேர்வு கால அட்டவணையில், தேதியை மாற்றம் செய்யாமல், பிளஸ் 2, தமிழ் தேர்வு நடக்கும் நாளில், பிளஸ் 1 ஆங்கில தேர்வு நடத்துதல் என அனைத்து பாடங்களின் தேர்வு தேதியை மாற்றி, திருத்தம் செய்யப்பட்ட கால அட்டவணையை வெளியிட வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment